கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Mai 2020

மஷ்ரூம் மசாலா நோன்பு கஞ்சி

மஷ்ரூம் மசாலா நோன்பு கஞ்சி ( குக்கர் முறை) சைவம்


 தேவையான பொருட்கள்

 பொடித்த நொய் அரிசி – அரை டம்ளர்
 பாசி பருப்பு – இரண்டு மேசைகரண்டி
 கரட் – ஒரு சிறிய துண்டு
 மஷ்ரூம் - 50 கிராம்
 வெங்காயம் – ஒன்று
 தக்காளி – ஒன்று
 எண்ணெய் + நெய் - 1 தேக்கரண்டி
 பட்டை - 1
 பச்சை மிளகாய் – ஒன்று
 உப்பு – தேவைக்கு
 பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்
 பொடியாக அரிந்த பூண்டு - முன்று
 கொத்துமல்லி தழை – சிறிது
 புதினா – சிறிது
 மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
 மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
 உப்பு – கால் தேக்கரண்டி

 தாளிக்க
எண்ணெய் + நெய் - இரண்டு தேக்கரண்டி
 சின்ன வெங்காயம் - ஆறு
 இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
 கொத்து மல்லி தழை - கைக்கு ஒரு கொத்து

 செய்முறை

 அடுப்பின் மீது குக்கரை ஏற்றி எண்ணெய் ஊற்றி சிறிது காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்து வெங்கயம் + கரட்டை போட்டு வதக்கவும்,

 பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை அடங்கியதும், கொத்துமல்லி புதினா, தக்காளி,பச்சமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.

 தக்காளி மடங்கியதும் மஷ்ரூமை நான்காக வெட்டி சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 4 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட்டு கொதி வந்ததும் தேங்காய், அரிசி + பாசிபருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறி விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் வந்ததும் இறக்கவும்.

ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கி கட்டி பிடிக்காமல் கிளறி விட்டு கொதிக்க விடவும்.

 தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கிளவும்.

அரிசி ப‌ருப்பு இர‌ண்டும் வெந்து க‌ஞ்சி ப‌த‌ம் வ‌ந்த‌தும் இறக்க‌வும்.

கடைசியாக எண்ணெய் + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இறக்கவும்.

Dienstag, 12. Mai 2020

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

தேவையான பொருட்கள் 

 பச்சரிசி – 100 கிராம் 
 பயத்தம் பருப்பு – 25 கிராம் 
 சின்ன வெங்காயம் – 100 கிராம் 
 கரட் – 1
 தக்காளி – 1 
 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் 
 சீரகம் – 1/2 டீஸ்பூன் 
 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் 
 பச்சை மிளகாய் – 2
 பிரியாணி இலை – 1 
 கொத்தமல்லி – சிறிது 
 புதினா – சிறிது 
 தேங்காய் பால் – அரை கப் 
 எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
 நெய் – 1 டேபிள் ஸ்பூன் 
 உப்பு – தேவையான அளவு 


 செய்முறை 

 கரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

 பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். 

 அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். 

மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும் 

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

 தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கரட், புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்

 கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும். 

 அடுத்து அதை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி பரிமாறவும். 

சுவையான நோன்பு கஞ்சி ரெடி.

Mittwoch, 13. Juni 2018

வியாழக்கிழமை


இலங்கை முட்டை குழம்பு


தேவையான பொருட்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
பசுப்பால் /தேங்காய்ப்பால் -தேவையானளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இலங்கை மிளகாய்த் தூள் - 1/2 - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து(விரும்பினால்)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
பழப்புளி /தேசிக்காய் புளி - தேவையானளவு 

செய்முறை

மூன்று முட்டைகளை ஒரு  பாத்திரத்தில் 
வைத்து  அம்முட்டைகள் மூழ்கும் அளவு 
அதன் மேல் தண்ணீர் விடவும் .

அதன் பின்னர் அப்பாத்திரத்தினை 
அடுப்பில் வைத்து  அடுப்பினை பற்ற
வைத்து 10 நிமிடம் வரை முட்டைகளை 
வேகவைக்கவும்.

.அம் முட்டைகள்  வெந்ததும் அடுப்பினை 
அணைத்துவிட்டு அடுப்பிலிருந்து 
அவற்றை இறக்கி வைக்கவும் .

அதன் பின்னர் அதில் உள்ள தண்ணீரை 
வடிகட்டிய ,பின்னர்  அம்முட்டைகளை 
சூடு ஆறவிடவும் .

முட்டைகளில் உள்ள  சூடு ஆறியதும், 
முட்டைகளில் உள்ள ஓட்டினை  நீக்கவும் , 

அதன் பின்னார் ஒவ்வொரு முட்டை
களையும்  எடுத்து சரிபாதி இரண்டு  
துண்டுகளாக நீளவாக்கில்  வெட்டி ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு  வெங்காயத்தை தோல் உரித்து  
சுத்தம் செய்து பொடியாக  வெட்டி ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும் 

,வைத்த பின்னர் தக்காளி  பழத்தை  
எடுத்து சுத்தம்செய்து அதனை  
பொடியாக நறுக்கி இன்னொரு 
பாத்திரத்தில் வைத்து  கொள்ளவும்.

இதன் பின் உள்ளியை  ( பூண்டை) தோல் 
நீக்கி சுத்தம் செய்து அவற்றை ஓரளவு 
துண்டுகளாக வெட்டி ஒரு  பாத்திரத்தில் 
வைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பினை  பற்ற வைத்து அதன் 
மேல் தாட்சியை(வாணலியை)வைத்து 
அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும் .

சூடானதும் அதில் வெட்டியா உள்ளியை 
(பூண்டை)போட்டு வதக்கவும். 

பிறகு நறுக்கிய வெங்காயத்தை 
அதனுடன்  போட்டு வதக்கவும்.

இவை யாவும்  வதங்கிய பின்னர் 
அதனுடன்  நறுக்கிய தக்காளியைப் 
போட்டு பச்சைவாசனைபோகும் 
வரை வதக்கவும்.

இவை யாவும் வதங்கிய பின்னர் 
இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், 
இலங்கை மிளகாய்த்தூள்ஆகியவற்றை 
சேர்த்து அதில் உள்ள பச்சைவாசனை 
போகும் வரை வதக்கவும் 

பின்னர் அவற்றுடன் தேவையான அளவு 
தண்ணீர்+பால்  சேர்த்து நன்கு 
கொதிக்க விடவும்.

கொதித்த  பின்னர்  மீதமுள்ள ஒரு 
முட்டையை உடைத்து கொதிக்கும் 
குழம்பில் சேர்த்து நன்கு கிளறி 
கொதிக்க விடவும்.

கிளறிய பின்னர் வெட்டி வைத்துள்ள 
வேக வைத்த முட்டைகளை அதில் 
முட்டைகள் உடையாமல் கவனமாக போடவும்.

பின்னர் அவற்றை நன்றாக கொதிக்க விடவும்.

அவையாவும் கொதித்த 
பின்னர்  பழப்புளி /தேசிக்காய் புளி
சேர்த்து அதனை சில நிமிடங்கள் 
கொதிக்கவைக்கவும் 

அவையாவும்  கொதித்த பின்னர் 
அடுப்பினை அணைத்துவிட்டு 
அப்பாத்திரத்தை அடுப்பிலிருந்து 
இறக்கவும்.

பின்னர் நறுக்கிய சுத்தம் செய்து 
கொத்தமல்லித்தழை, சுத்தம் செய்து 
நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை 
அதனுள் போட்டு அப்பாத்திரத்தினை  
சிறிது நேரம் மூடிவைக்கவும் .

இப்போது சுத்தமான சுவையான 
இலங்கை முட்டைக்குழம்பு  தயராகி
விட்டது .

ஒரு தட்டில் சோறு (சாதம் )புட்டு,
இடியப்பம்; பாண் இவையாவற்றில் 
ஒன்றை வைத்து அதனுடன் 
சுத்தமான சுவையான இலங்கை 
முட்டைக்குழம்பினையும்  வைத்து 
பரிமாறவும் :

Montag, 19. Juni 2017

திங்கள்கிழமை


Donnerstag, 15. Juni 2017

முட்டையில்லாத ரிச் கேக்

தேவையான பொருட்கள்

ரவை – 500 கிராம்
மார்ஜரின் – 500 கிராம்
சீனி – 350 கிராம்
டே;டஸ் – 500 கிராம்
ரின் பால் – 1 ரின்
தண்ணீர் – 1 ரின் அளவு
தேயிலைச்சாயம் -1 கப்
பிரிசேவ்ஸ்
பம்கின் – 200 கிராம்
கன்டிட் பீல் – 200 கிராம்
சௌசௌ – 200 கிராம்
ஜின்ஜர் – 200 கிராம்
சேர்ரி – 200 கிராம்
ரெஸ்சின் – 200 கிராம்
கஜூ – 200 கிராம்
எசென்ஸ் வகைகள்
வனிலா – 4 ரீ ஸ்பூன்
ரோஸ் – 2 ரீ ஸ்பூன்
ஆமென்ட் – 2 ரீ ஸ்பூன்
கோல்டன் சிரப் – 2டேபிள் ஸ்பூன்
பவுடர் வகைகள்
பேகிங் பவுடர் – 4 ரீ ஸ்பூன்
சோடியம் பைகார்பனேட்- 2 ரீ ஸ்பூன்
ஸ்பைசெஸ் – 2 ரீ ஸ்பூன்

செய்முறை

தயாரிப்பதற்கு 12 மணித்தியாலம் முன்பு டேட்சை சிறியதாக வெட்டி அல்லது அரைத்து எடுத்து வையுங்கள்.

ரீ சாயத்தில் சோடியம் பைகார்பனேடை கரைத்து எடுத்து டேட்ஸ் மேல் ஊற்றி பிரட்டி வைத்துவிடுங்கள். ரவையை லேசாக வறுத்து எடுத்து வையுங்கள்.

12 மணித்தியாலயத்தின் பின்பு மார்ஜரின், சீனி இரண்டையும் மெதுவாகும் வரை கலக்கி ரின் பால் சிறிது சிறிதாக விட்டுக் கலக்குங்கள்.

நன்கு கலங்கிய பின் தண்ணீர் ஒரு கப் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கிவிடுங்கள்.

ரவையில் பேகிங்கை போட்டு நன்னு சேர்த்துவிடுங்கள்.
அடித்த கலவையுடன் சிறிது சிறிதாக ரவையைப் போட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஊற வைத்த டேட்ஸ்சைப் போட்டு கலந்து விடுங்கள்.
பிரிசேவ் வகைகள் யாவற்றையும் சேர்த்து, கோல்டன் சிரப், ஸ்பைஸ் பவுடர், எசன்ஸ் வகைகள் யாவற்றையும் விட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பேகிங் ரேயின் அடியில் ஒயில் பேப்பர் வைத்து, மார்ஜரின் பூசி, கேக் கலவையை ஊற்றி 180 டிகிரியில் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சாப்பிடுவதற்கு 2 வாரங்களுக்கு முன் செய்து கொள்ள வேண்டும்.
செய்து ஒரு வாரத்தின் பின் கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஓயில் பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாரம் கேக்கின் மணத்தில் வாயையும் கையையும் கட்டி வைத்திருப்பது உங்களில்தான் தங்கியுள்ளது.

மிகவும் சுவையான முட்டையில்லாத சைவ ரிச் கேக் தயார்.

நாட்கள் செல்லச்செல்ல சுவையும் அதிகரிக்கும்.

1 ½ மாதம் அளவில் கெடாமல் இருக்கும். நீங்கள் சாப்பிட்டு முடிக்காவிட்டால்.

Freitag, 1. Januar 2016

புதுவருட வாழ்த்து, 2016



 

Montag, 29. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 22. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 15. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 8. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 1. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 24. November 2014

திங்கள்கிழமை


Montag, 17. November 2014

திங்கள்கிழமை


Montag, 10. November 2014

திங்கள்கிழமை